
அதிக அளவு இடம் பிடிக்காமல் எங்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும் ஃபிளாஷ் குழந்தைகள் முதல் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் பிளாஷ்-ல் ஒரு விளையாட்டு உருவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமக்கு பிளாஷ்-ன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் இனி பிளாஷ் மென்பொருள் துணையின்றியும் எந்த விதமான கோடிங் அறிவும் இல்லாமல் நாம் பிளாஷ் விளையாட்டுக்களை உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
கீழே உள்ள தளத்திற்கு சென்று Download Now என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை எளிதாக நம் கணினியில் தறவிரக்கலாம். தறவிரக்கி இந்த மென்பொருளை இயக்கியதும் Help Center என்பதை சொடுக்கி மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். Create New Game என்பதை சொடுக்கி நாம் புதிய விளையாட்டு உருவாக்க ஆரம்பிக்கலாம்.நாம் உருவாக்கும்விளையாட்டில் வைக்க இருக்கும் ஒவ்வொரு ஐகான் மற்றும் அதை சொடுக்கினால் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்ப்தையும் நாமே எளிதாக உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Publish it என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய விளையாட்டை நாமே விளையாடி பார்க்கலாம் மாற்றங்கள் ஏதும் இருப்பின் சரிசெய்யலாம். இனி விளையாட்டு விளையாட மட்டும் தான் தெரியும் என்று சொல்லாதீர்கள் நாம் நினைத்தால் அழகான இதுவரை யாரும்உருவாக்காத ஒரு புதிய விளையாட்டு கூட உருவாக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்..
No comments:
Post a Comment