menu

Wednesday, 10 April 2013

உங்கள் கணினியின் லைசன்ஸ் மறந்து விட்டால்

<கணினியில் முக்கியமான ஒன்று இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் எனப்படும் இயங்கு தளங்கள்>. பெரும்பாலும் அனைவரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் விண்டோஸ் இயங்கு தளத்தையே பயன் படுத்துகிறோம் . நாம் இந்த கணினியில் இந்த இயங்கு தளங்களை நிறுவும் போது அதற்க்கான லைசன்ஸ் மற்றும் சீரியல் எண்ணை சரியாக கொடுத்தால் மட்டுமே இந்த இயங்குதளத்தை நம் கணினியில் நிறுவ முடியும்

Monday, 8 April 2013

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு ( விஜிலென்ஸ் ) அதிகாரிகளை எளிதாக தொடர்பு கொள்ள உதவும் இணையதளம்

அரசு அதிகாரி ஒருவர் தன் கடமையை செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரை எங்கு எப்படி புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளம் தெளிவாக தெரிவிக்கிறது ஒவ்வொரு மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் போன் நம்பர் முதல் அலைபேசி எண் வரை அத்தனையும் கொடுக்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை தொடர்பு கொள்ள லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை” விஜிலென்ஸ் “ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துவருவதை பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்போம், லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை பற்றியதகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுங்கள் என்று சொல்வதை கேட்டிருப்போம் எப்படி இவர்களை தொடர்புகொள்வது இவர்களின் போன் நம்பர் முதல் அனைத்துவிபரங்களையும் சொல்ல அரசு இணையதளம் ஒன்று உள்ளது இதைப்பற்றி இனி விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் அரசுத்துறையில் வேலை பார்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் சரி தங்கள் கடமையை செய்ய லஞ்சம் கேட்டால் உடனடியாக நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை தொடர்பு கொண்டு கூறலாம். இத்தளத்திற்கு சென்று இதன் நடவடிக்கைகள் பற்றி விரிவாகதெரிந்து கொள்ளலாம். இடது பக்கம் இருக்கும் Directoryஎன்பதை சொடுக்கி வருவதில் நாம் எந்த Range ல் இருக்கும் அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டுமோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.உதாரணமாக ஒவ்வொரு Range-லும் இருக்கும் அதிகாரிகளின் பெயர் மற்றும்அலுவலக முகவரி , போன் நம்பர்,அலைபேசி எண் என அனைத்தையும் கொடுக்கிறது. சம்பந்தப்பட்டஅதிகாரிகளை தொடர்பு கொண்டு எங்கு லஞ்சம் கேட்டாலும் இவர்களுக்கு தெரிவிக்கலாம்.உதாரணமாக ஒரு காவல் நிலையத்தில்!
லஞ்சம் அதிகமாக விளையாடுகிறது என்றால் உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ஆதாரத்துடன்தெரிவிக்கலாம். லஞ்சத்தை ஒழிக்க தமிழகஅரசுடன் நாமும்கைகோர்த்து செல்வோம்.கண்டிப்பாக இந்தப்பதிவு விஜிலென்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

Sunday, 7 April 2013

டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.

பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள் வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில் வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. டோரண்ட் கோப்புகள் தரவிரக்க பல மென்பொருள்கள் வந்தாலும் அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல் நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட் கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம் உள்ளது.கீழே உள்ள தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும் கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட் கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம் கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால் ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.

ஆன்லைன் மூலம் Id card( அடையாள அட்டை ) எளிதாக உருவாக்கலாம்.

சிறிய நிறுவனத்தில் இருந்து பெரிய நிறுவனம் வரை அனைத்திற்கும் அடையாள அட்டை என்ற ஒன்று தற்போது முக்கியனமான ஒன்றாக மாறி வருகிறது இந்த அடையாள அட்டையை எளிதாக நாமே வடிவமைக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. சாதாரனமாக கணினி பயன்படுபத்துபவர்களையும் கணினிமேதைகள் ஆக்க வேண்டும் என்பதை மட்டும் லட்சியமாக கொண்டு தான். அந்த வகையில் இன்று எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் யாருடைய கிராபிக்ஸ் உதவியும் இன்றி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் நம் நிறுவனத்திற்கு தேவையான அடையாள அட்டையை நாமே வடிவமைக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. கீழே உள்ள தளத்திற்க்கு சென்று நாம் நம் நிறுவனத்தின் பெயர், எந்த வண்ணத்தில் அடையாள அட்டை இருக்கவேண்டும் என்பதையும் மற்றும் இதரத் தகவல்களை கொடுத்து Create என்ற பொத்தானை சொடுக்கி எளிதாக அதுவும் சில நிமிடங்களில் அடையாள அட்டை உருவாக்கலாம்.அடையாள அட்டை உருவாக்க்க விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

அரிய வகை மேஜிக் ட்ரிக்ஸ் ( Magic Tricks ) வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்

சில நிகழ்ச்சிகள் நடக்கும் போதுஇடையிடையே நடக்கும் மேஜிக் ட்ரிக்ஸ் நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும், இது போல் செய்வது எப்படி என்ற கேள்வி நம்மில் பல பேருக்கும் இருக்கும் எப்படி இது போல் மேஜிக் ட்ரிக்ஸ் செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருந்தாலும் மேஜிக் செய்வதில் பயிற்சி தான் முக்கியம் சிறிய ட்ரிக்ஸ் தான் என்றாலும் அதைப் பயன்படுத்துவதில் உள்ள நெளிவு சுழிவு முக்கியம் அந்த வகையில் ஒளிவு மறைவு இல்லாமல் மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்க ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://easybartricks.com இந்தத்தளத்திற்கு சென்று பலவகையான மேஜிக் ட்ரிக்ஸ் எப்படி செய்கின்றனர் என்பதை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கின்றனர் இதில் எந்த வகையான ட்ரிக்ஸ் நமக்கு தெரிய வேண்டுமோ அதற்கான வீடியோவை சொடுக்கி நாம்தெரிந்து கொள்ளலாம். Magic Tricks, Bottle Tricks , Coin Tricks ,Bill Tricks,Lighter Tricks Cigarette Tricks, Easy Magic Tricks, All Bar Tricks போன்ற அனைத்தும் தனித்தனி வகையாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேஜிக் ட்ரிக்ஸ் பற்றி அறிந்து கொள்ள விரும்பும்அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வலைப்பக்கத்தை அழகான பிடிஎப் கோப்பாக மாற்றி பிரிண்ட் செய்யலாம்.

<வலைப்பக்கத்தை பிரிண்ட் செய்வதற்கு பல வசதிகள் >இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அவைகளின் Alignment பிரிண்ட் செய்வதற்கு சரியாக வருவதில்லை கூடவே PDF கோப்பாக மாற்றினாலும் அவற்றில் எழுத்துக்கள் முறையாகவும் சரியான இடத்தில் தெரியவில்லை என்ற குறையை போக்குவதற்காக நமக்கு ஒரு தளம் உதவுகிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வரலாறு முக்கியம் என்று எண்ணும்நமக்கு நம்முடைய பதிவுகள் அல்லது நமக்கு பிடித்தமான நண்பர்களின் பதிவுகளை PDF கோப்பாக மாற்றி சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்இதற்காக நாம் பல தளங்களை தேடிச்சென்றிருப்போம் ஆனால் பல தளங்கள் தமிழ் தளங்களை பிடிஎப் கோப்பாக மாற்றினால் லட்டை பிச்சிப்போட்டது போல் எழுத்துக்களை காண்பிக்கும் ஆனால் இந்ததளம் ஒரு சில இடங்களைத் தவிர அதிகபட்சம் நன்றாகவே இருக்கிறது

எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் ஃபிளாஷ் விளையாட்டு நம் விருப்பப்படி உருவாக்கலாம்.

விளையாட்டுகளில் அதிக அளவு மக்கள் பயன்படுத்தும் ஃபிளாஷ் விளையாட்டுகளை ( Make Flash Game ) எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் நம் விருப்பபடி எப்படி எல்லாம் வேண்டுமோ அப்படி எல்லாம் எளிதாகஉருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அதிக அளவு இடம் பிடிக்காமல் எங்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும் ஃபிளாஷ் குழந்தைகள் முதல் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது. முன்பெல்லாம் பிளாஷ்-ல் ஒரு விளையாட்டு உருவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமக்கு பிளாஷ்-ன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டும் ஆனால் இனி பிளாஷ் மென்பொருள் துணையின்றியும் எந்த விதமான கோடிங் அறிவும் இல்லாமல் நாம் பிளாஷ் விளையாட்டுக்களை உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
கீழே உள்ள தளத்திற்கு சென்று Download Now என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை எளிதாக நம் கணினியில் தறவிரக்கலாம். தறவிரக்கி இந்த மென்பொருளை இயக்கியதும் Help Center என்பதை சொடுக்கி மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். Create New Game என்பதை சொடுக்கி நாம் புதிய விளையாட்டு உருவாக்க ஆரம்பிக்கலாம்.நாம் உருவாக்கும்விளையாட்டில் வைக்க இருக்கும் ஒவ்வொரு ஐகான் மற்றும் அதை சொடுக்கினால் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்ப்தையும் நாமே எளிதாக உருவாக்கலாம். எல்லாம் உருவாக்கிய பின் Publish it என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய விளையாட்டை நாமே விளையாடி பார்க்கலாம் மாற்றங்கள் ஏதும் இருப்பின் சரிசெய்யலாம். இனி விளையாட்டு விளையாட மட்டும் தான் தெரியும் என்று சொல்லாதீர்கள் நாம் நினைத்தால் அழகான இதுவரை யாரும்உருவாக்காத ஒரு புதிய விளையாட்டு கூட உருவாக்கலாம். புதுமை விரும்பிகளுக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
.

கார் Car -ல் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை சரி செய்ய சொல்லி கொடுக்கும் பயனுள்ள தளம்.

இரண்டு சக்கர வாகம் பயன்படுத்திவிட்டு பொருளாதாரம்சற்று முன்னேறியவுடன் நடுத்தர மக்கள் அடுத்து வாங்குவது நான்கு சக்கர வாகனம் என்று சொல்லக்கூடிய கார் . கார் வாங்குவதை விட அதில் ஏற்படும் சிறிய பழுதுகள் கூட பெரிய அளவில் செலவுகளை வைத்துவிடும் நமக்கும் அதைப்பற்றி விபரமாக தெரியாது என்பதால் கேட்கும் தொகையை கொடுத்து நடையை கட்ட வேண்டியது தான் என்று சொல்லும் நம்மவர்களுக்கு காரில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வழி சொல்கிறது ஒரு தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கும் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்களுக்கும் உதவும் வகையில் இத்தளம் வந்துள்ளது, அடிக்கடி காரில் ஏற்படும் பிரச்சினைகள் என்ன என்பதை பட்டியலிட்டு எப்படி அந்த பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதை எளிதாக சொல்கிறது இந்தத்தளம்.காரில் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் எப்படி சரி செய்ய வேண்டும் என்று தெளிவாக சொல்லி கொடுக்கின்றனர், உதாரணமாக பிரேக்-ல் பழுதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லி கொடுக்கின்றனர், Body & Interior , Engine , Transmissions & Drivetrains, Brakes, Steering & Suspension, Preventive Maintenance , பழுதான பொருளுக்கு மாற்றாக புதிய பொருள் வாங்குவதாக இருந்தால் எவ்வளவு செலவாகும் என்பதை துல்லியமாக சொல்கின்றனர், பல சிறிய பிரச்சினைகளை கூட நாமே எளிதாக சரி செய்யும் படி விளக்கி சொல்கின்றனர், இதைத்தவிர ஒரு பொருள் பழுதாவதற்கு முன்பு ஆரம்பத்தில் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதையும் தெளிவாக சொல்கின்றனர். கண்டிப்பாக கார் வைத்திருக்கும் அனைவருக்கும் , மெக்கானிக் படிக்கும் நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக click for link

Friday, 5 April 2013

தளபதியின் சமரசம்

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில்இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது. இது மன்னர் எனக்காக அளித்த வீடு.ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள்.அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார். மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார். கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார். கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார். மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார். பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி. நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

Monday, 1 April 2013

KASPERSKY ஆன்டிவைரஸ் full version download

KASPERSKY ஆன்டிவைரஸினை full version. கணினியில் வைரஸின் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க தான் ஆன்டிவைரஸினை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த ஆன்டிவைரஸினை பெற அதிக தொகையை செலுத்த வேண்டியுள்ளது. அப்படியே இலவச தொகுப்பினை பயன்படுத்தினாலும் அது அந்த அளவிற்கு கைக்கொடுப்பது இல்லை. அதே மாறி அப்டேட் செய்வதிலும் KASPERSKY ஆன்டிவைரஸ் சிறந்தது. மிக சிறிய சிறிய பைலாக அப்டேட் செய்துக்கொள்கிறது. இந்த ஆன்டிவைரஸினை இலவசமாக பெற முதிலில் இதன் TRIAL யை டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். DOWNLOAD TRIAL டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். பின்னர் KASPERSKY TRIAL VERSION யை தங்களின் கணினியில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இந்த சிரியல் கீ பைல்களையும் டவுண்லோட் செய்துக்கொள்ளுங்கள். இது தான் முக்கியம் மிகவும். DOWNLOAD SERIAL KEYS. பின்னர் தங்களின் தங்களின் கணினியில் இண்டர்நெட் இணைப்பினை துண்டித்துவிட்டு விடுங்கள். பின்னர் KASPERSKY ஆன்டிவைரஸ் தொகுப்பினை இயக்குங்கள், அதில் ACTIVATION PRODUCT என்பதினை கிளிக் செய்யவும். தற்போது ஓர் விண்டோ தோன்றும். அதில் கீழ்காணும் சிரியல் கீயினை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். உதவிக்கு படத்தினை காணவும், பின்னர் NEXT என்பதனை கிளிக் செய்யவும். SERIAL KEY TO PASTE: 11111-11111-11111-1111X தற்போது தோன்றும் விண்டோவில் கீ பைலினை தேடவும் என குறிப்பிடப்படும். தற்போது நீங்கள் செய்ய வேண்டியது தான் முக்கியம். BROWSE என்பதனை கிளிக் செய்து நீங்கள் டவுண்லோட் செய்த சீரியல் கீ பைல்களை தேர்வு செய்யவும். பின்னர் NEXT என்பதினை கிளிக்செய்யவும். அவ்வளவு தான் முடிந்தது. KASPERSKY ஆன்டிவைரஸினை தொகுப்பினை இலவசமாக பயன்படுத்தலாம்..trial version!
.
. activator download
!

.